காஷ்மீரில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு! 

  Padmapriya   | Last Modified : 04 Nov, 2018 11:39 am
srinagar-records-season-s-coldest-night

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2  தினங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பல வாகங்கள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன. 

காஷ்மீரில் பல மாவட்டங்களில் நேற்று கடும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு அங்கு 0.4 டிகிரி செல்சியஸ் உறைநிலை பதிவானது. இது இதுவரை இல்லாத கடுமையான பனிப்பொழிவு என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  கடும் பனியால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களில் உறை பனி சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. சாலைகளில் பனி காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடா் பனிப்பொழிவால் சுரங்கப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் பாதுகாப்பு படை வீரர்கள்  உட்பட 300 க்கும் மேற்பட்ட பயணிகள் செய்வதறியாது சாலையில் தவித்தனர். 

இதையடுத்து தகவல் அறிந்தும் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனை அடுத்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சாலையில் தவித்தவர்களை பேருந்துகள் மற்றும் பல தனியார் வாகனங்கள் மூலம் மீட்டனர்.  இதில் ஜம்மு நோக்கி சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனமும் சிக்கி கொண்டது.  பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இவர்களது வாகனம் சென்றது. பின்னர் அதில் இருந்து வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பனிஹல் நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close