டெல்லியில் சிக்னேச்சர் பாலம் கட்டப்பட யார் காரணம்: பா.ஜ.க - ஆம் ஆத்மி மோதல்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 09:12 am
bjp-aap-clash-at-signature-bridge

தலைநகர் டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தின் திறப்பு விழாவில் போது பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

டெல்லி வஜிராபாத்தில் யமுனை நதியின் மேல் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிக்னேச்சர் பாலம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்நிலையில் பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் திட்டம் பல்வேறு காரணங்களால் 14 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் நிறைவடைந்தது. 494 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு தற்போது 1,594 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது. டெல்லியின் அடையாளங்களில் ஒன்றாக இந்த பாலம் மாறும் என டெல்லி அரசு கூறியுள்ளது. பாரிஸ் ஃஈபிள் கோபுரத்தை போன்று, டெல்லியின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் 154 மீட்டர் உயரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பார்வை தளம் இந்த பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்னேச்சர் பாலத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது ஆம் ஆத்மி கட்சியினருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி ஆதரவாளர்களும், ஆம் ஆத்மி கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதால் பால திறப்பு விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாலம் கட்டப்பட  பா.ஜ.க காரணமா, ஆம் ஆத்மி காரணமா என்கிற  வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close