பாஜகவில் இணைகிறார் மிசோரம் சபாநாயகர் ஹிபேய்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 03:44 pm
mizoram-speaker-hiphei-resigned

மிசோரம் மாநில சட்டசபை சபாநாயகர் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவள்ளது.  இந்த தேர்தலில் வெற்றி  பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக  களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், பாலக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். அப்போது, அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா உள்ளிட்ட சிலர் சென்றனர். இன்று பிற்பகல் ஐசாலில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு செல்லும் ஹிபேய்,  முறைப்படி பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close