அமேதி தொகுதி பெண்களுக்கு ஸ்மிருதி தீபாவளி பரிசு

  டேவிட்   | Last Modified : 05 Nov, 2018 10:18 pm
smriti-diwali-gift-to-amedhi-people

உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதி உள்ள பெண்களுக்கு, தீபாவளி பரிசாக, 10 ஆயிரம் புடவைகளை, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அனுப்பியுள்ளார்.

கடந்த 2014ல், அமேதி தொகுதியில், ராகுலுக்கு கடுமையான போட்டி கொடுத்த ஸ்மிருதி, இறுதியில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதியை கைப்பற்ற, பாரதிய ஜனதா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தலில், தோல்வியடைந்தும், அடிக்கடி அமேதிக்கு செல்லும் ஸ்மிருதி, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். மேலும், தொகுதியில் உள்ள பெண்களுக்கு, புடவை பரிசாக வழங்கி வருகிறார். கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், தீபாவளியையொட்டி, 'சகோதரியின் அன்பு பரிசு' என்ற பெயரில், ஸ்மிருதி அனுப்பிய, 10 ஆயிரம் புடவைகளை, அமேதியில் உள்ள, பாஜக மகளிர் அணியினர் மற்றும் பெண்களுக்கு வினியோகித்தனர்.

இது குறித்து, பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் உமா சங்கர் பாண்டே, 'புடவை வழங்குவதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது எனவும். அமைச்சர், தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக அனுப்பிஉள்ளார் என்றும் தெரிவித்தார்.    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close