திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக ஜார்கண்ட்  உருவாகும் : உமா பாரதி

  சுஜாதா   | Last Modified : 06 Nov, 2018 08:58 am
jharkhand-to-become-open-defecation-free-by-november-15-says-uma-bharti

ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான வரும் நவம்பர் 15ஆம் தேதி, அம்மாநிலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகளைத் தொடர்ந்து, திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக உருவாகும் என்று,  கங்கை கிராம தூய்மை சம்மேளனத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். 

சுமார் 10,000 தூய்மை பணியாளர்கள், கங்கைத் தன்னார்வல இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான மக்கள்-அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் - உள்ளிட்டோர் இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கங்கை கரையோர கிராமங்களை மாதிரி கிராமங்களாக உருவாக்குவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு, அச்சாணி போன்று மிகவும் அவசியமாகும் என்பதை மத்திய அமைச்சர் உமாபாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close