சத்தீஸ்கர் – 62 நக்ஸல்கள் சரண்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:57 pm
chattisgarh-62-naxals-surrendered-with-guns

சத்தீஸ்கர் மாநிலத்தில், 62 நக்ஸல்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்து காவல்துறையிடம் இன்று சரண்டைந்துள்ளனர். இது தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

நக்ஸல்களின் அச்சுறுத்தலுக்கு பெயர் போனது சத்தீஸ்கர் மாநிலம். இங்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலே நடைபெறாத கிராமம் குறித்து அண்மையில் செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் செய்திக் குழுவினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.

இத்தகைய சூழலில், நாராயணப்பூர் மாவட்டத்தில் 62 நக்ஸல்கள் தங்களுடைய நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா முன்னிலையில் இன்று சரண்டைந்தனர். நக்ஸல்களின் அச்சுறுத்தல் நிறைந்த தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 62 பேர் ஒரே சமயத்தில் சரண்டைந்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close