அயோத்தியா: 3 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 07:51 am
ayodhya-3-lakhs-lights-guinness-record

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெற்றது.
 
இறுதி நாளான நேற்றிரவு அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியுடன் தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் ஆதித்யாநாத், ஆளுநர், துணை முதலமைச்சர், இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி உள்ளிட்டோரும்,  பல்லாயிரக்கணக்கான மக்களும் இதில் பங்கேற்றனர். தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை யாவரும் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close