பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம்: சந்திரபாபு நாயுடு

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 12:16 am
all-parties-meet-on-22nd-by-chandrababu-naidu

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து  வரும் 22ம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விலகினார். 2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து, அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்தார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ், முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளாரர். இந்த கூட்டத்தில அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close