மேற்கு வங்கம்: ரத யாத்திரை தடுப்பவர்களின் தலைகள் நசுக்கப்படும்: லாக்கெட் சாட்டர்ஜி

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 03:31 pm
those-who-oppose-rath-yatra-will-be-crushed-locket-chatterjee

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் ரத சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என மாநில மகளிர் அணித் தலைவர்  லாக்கெட் சாட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.  அதன்படி டிசம்பர்  5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மூன்று ரத யாத்திரைகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பேரணிகளை பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் எனவும், இறுதியாக கொல்கத்தா நகரில் நடக்க உள்ள மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மால்டாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவரான லாக்கெட் சாட்டர்ஜி, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுக்க எண்ணுபவர்களின் தலைகள் அந்த ரதச்  சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  அவரது பேச்சுக்கு தற்போது கடும் கணடனம் எழுந்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close