சத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு

  டேவிட்   | Last Modified : 12 Nov, 2018 08:22 pm
chhattisgarh-elections-70-voter-turnout-in-first-phase

 சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் கமிஷன் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி மேற்கண்ட தொகுதிகளில் சராசரியாக சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும், சில வாக்குச்சாவடிகளில் இருந்து விவரங்கள் வர வேண்டியுள்ள நிலையில் இந்த சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் கமிஷன் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close