அனைத்து மதத்தினரும் சபரிமலைக்கு செல்லலாம்: உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 09:43 am
all-religions-can-go-to-sabarimala-kerala-government

சபரிமலை ஜயப்பன் கோவில் மதசார்பற்றது, எனவே அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க-வை சேர்ந்த பிரமுகர் ஒருவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்க வேண்டும் என  கேரள உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார். மேலும்,  1965ம் ஆண்டு கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், சபரிமலை ஐய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது எனவும்,  சரணம் ஐய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. ஐய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்கள் வருகின்றனர்.  மேலும், சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி மசூதியில் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close