மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை மீறி 76.28 சதவீதமாக உயர்ந்தது சட்டீஸ்கர் வாக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 09:11 pm
chhattisgarh-polling-crosses-76-amid-maoist-threats

மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு இடையே சட்டீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், 76.28 சதவீத வாக்காளர்கள் அதில் வாக்களித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு இடையே, சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில், பொதுமக்கள் கலந்துகொள்ளக் கூடாது, என எச்சரித்து வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், தேர்தலுக்கு சிறிது நேரத்திற்க்கு முன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். 

மாவோயிஸ்ட் தாக்கல் அதிகம் இருக்கும் பகுதிகளில், கடும் பாதுகாப்புக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், இதையெல்லாம் மீறி, 70% வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. வாக்குப்பதிவு விகிதம் குறித்து தொடர்ந்து கணக்கிட்டு வருவதால், இது மேலும், அதிகரிக்க கூடும், எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், சட்டீஸ்கர் முழுவதும் 76.28 சதவீத வாக்காளர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியும், அதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11 ம் தேதியும் நடைபெறும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close