சபரிமலை விவகாரத்தில் சர்வதேச சதி!- ஆர்எஸ்எஸ் சந்தேகம் 

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 06:39 pm
international-conspiracy-to-destroy-sabarimala-says-top-rss-leader

சபரிமலை விவகாரத்தில் சர்வதேச சதி திட்டம் இருப்பதாகவும் அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிந்தும் அல்லது அறியாமலேயே விழுந்துவிட்டார் என்கிறார் ஆர்எஸ்எஸ் உயர்மட்ட உறுப்பினரும் பிரஜ்நாப்ராவின் தேசிய அமைப்பாளருமான ஜே நந்தகுமார் கூறியுள்ளார். 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய அளவிலான கொள்கை வகுப்பாளராகவும் பதவி வகிக்கும் ஜே நந்தகுமார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,''கேரள மாநில அரசு சபரிமலை விவகாரத்தில் வெளிநாட்டு ஏவல்கள் போலவே நடந்துகொள்கிறது. ஆனால் இதில் கலாச்சாரத்தின் மீது நம்பிக்கையுடையவர்களும் பக்தர்களும் அமைதியான வழிகளில் போராட்டங்களை நடத்துகின்றனர். 

கேரள மாநிலத்தில் அவர் இந்துமத நம்பிக்கைக்கும், கலாசாரத்துக்கும் எதிரான பல நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். ஆனால் சபரிமலை விவகாரத்தில் பிரச்னை வராத வரையில் நாங்கள் அமைதியுடன் தான் இருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்துவரை இந்த விவகாரத்தில் உட்கட்சி குழப்பம் எதுவும் இல்லை. முக்கியமாக அதன் மாநில தலைவர் இந்த விவகாரம் குறித்து பெரிதாக கருத்துக் கூட சொல்வதில்லை. 

பக்தர்களும் கடவுள் மீது நம்பிக்கையுடையவர்களும் நிச்சயம் 10 முதல் 50 வயது வரையில் உள்ள பெண்கள் சபரிமலை செல்வதை விரும்பவோ அனுமதிக்கவோ மாட்டார்கள். இதற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்திருந்தாலும் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவே செய்திருப்பார்கள். 

ஆனால் பக்தர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு போன்றவற்றை போட்டு, ஆட்சியில் இருக்கும் இடதுசாதியினர் மாநில மக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவருமே அமைதியான போராட்டங்களை மேற்கொண்டவர்கள் ஆவர். 

கடவுள் எதிர்ப்பை மட்டுமே தனது கொள்கையாக கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, சபரிமலை சுவாமி மீது உள்ள அடிப்படை நம்பிக்கையை கேள்விஎழுப்பி தென் இந்தியாவில் பிளவை ஏற்படுத்துகின்றது. இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும்.

அப்போது தான் பக்தர்களுக்கும் கடவுள் நம்பிக்கையுடையவர்களுக்கும் அது நியாயம் ஏற்படுத்துவதாக இருக்கும். பெரும்பான்மை மாநில மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறு சீராய்வு மனுவைக் கூட மாநில அரசு போடவில்லை.

இதுவே இது மக்கள் விரோத, மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு என கூறுவதற்கு உதாரணம் ஆகும்'' என்று ஜே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close