காவிரி தாய்க்கு சிலை - கர்நாடக அரசு முடிவு!

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 11:34 am
mother-cauvery-statue-in-karnataka

கர்நாடக மாநிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில் காவிரித்தாய்க்கு சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் காவிரித் தாய்க்கு சிலை அமைக்க, நேற்று பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாரும், சுற்றுலா துறை அமைச்சர் ஷாரா மகேசும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி, இந்த சிலை ரூ.1,200 கோடி மதிப்பில் 360 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளது. 125 அடி உயர பீடத்தில்  பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு அதன் மீது சிலை இருக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. இந்த பணிகளுக்கான டெண்டர் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என தெரிகிறது. காவிரித் தாயின் கையில் ஒரு குடம் இருப்பது போன்றும், அந்த குடத்தில் இருந்து எப்போது தண்ணீர் கொட்டும் வகையிலும் இந்த சிலை அமைக்கப்படவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close