ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 12:37 am
west-bengal-election-rally-in-jan-2019

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக அமையும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 2019ஆம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். 

இதில் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வருகிறார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close