லாலு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 10:52 am
doctors-have-reported-that-laalu-s-health-has-worsened

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரான லாலு பிராசாத், ரூ.900 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக தற்போது ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் லாலுவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை நீட்டித்து ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ரயில்வே ஊழல் வழக்கில் காணொலி காட்சி மூலம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் லாலு இன்று ஆஜராக உள்ளார்.

இதனிடையே, லாலுவுக்கும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், கடந்த 3நாட்களாக லாலு பிராத்தின் உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து காணப்படுவதாகவும், மருந்துகள் கொடுக்கப்பட்டும் சர்க்கரை அளவு குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், லாலுவின் உடல்நிலை மோசமடைந்ததால் சுயமாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close