மகராஷ்டிராவில் 2 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 03:49 pm
women-naxals-killed-by-commando-force

மகாராஷ்டிராவில் கமாண்டோ படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு கமாண்டோ படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தனோரா தாலுகாவிற்கு உட்பட்ட நிகல்கே வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.  இதையடுத்து கமாண்டோ படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close