அடக்குமுறைக்கு யார் அதிகாரம் தந்தது? கேரளா போலீஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் 

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 12:45 pm
after-detention-of-devotees-kerala-hc-reprimands-police-excesses-at-sabarimala

சபரிமலையில் ஐயப்பன் கோயில் பக்தர்கள் கைது செய்யப்பட்டதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்களிடம் அடக்குமுறை காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர். ராமச்சந்திர மேனன், என் அனில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலையில் பக்தர்கள் பலரை போலீஸார் நேற்று கைது செய்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சன்னிதானத்தை விட்டு பக்தர்களை இறங்கச் சொல்லி போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பக்தர்களிடம் கெடுபிடி காட்டிய சம்பவம் அடுத்த முறை நிகழ்ந்தால், போலீகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களில் வயதானவர்கள், குழந்தைகள், பெண்களிடம் போலீஸார் கெடுபிடியுடன் நடந்து கொள்ளக்கூடாது. நெய்அபிஷேகம் செய்வதற்கு அனுமதி பெற்ற பக்தர்களை சன்னிதானத்தை விட்டு இறங்கிச் செல்லுங்கள் என்று போலீஸார் வற்புறுத்தக்கூடாது. சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்போது மாநில அரசு வழக்கறிஞர் கூறுகையில், சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதை மீறிய பக்தர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 4 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும், இந்து ஐக்கியவேதி ஆர்வலர்களும்தான் காரணம் என்றும் தெரிவித்தார். 

பின்னர், மாநில அரசின் வாதத்தைக் கேட்டபின் வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கெடுபிடி காட்டும் அரசு 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. 
 
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் கார்த்திகை மாத மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை நடைத்  திறக்கப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்கள் நடை திறந்திருக்க உள்ளதை அடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. 

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு போராட்டகாரர்களை தடுக்க அனைத்து வகையிலான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 

ஞாயிறு என்று சபரிமலை சன்னிதானத்தில் இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்குப் பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 70 பக்தர்களை போலீஸார் கைது செய்து ஓரிடத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சபரிமலை சன்னிதானம் பகுதியில் திரண்ட பக்தர்கள் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close