புதுச்சேரி: இன்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு 

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 12:15 am
pondicherry-bars-closed-today

மிலாடி நபி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் இன்று மதுக்கடைகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கலால்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இன்று மிலாடி நபி பண்டிகையாதலால், புதுச்சேரி மாநிலத்தில், இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து மது விற்பனையும் தடை செய்யப்படுகிறது. உத்தரவை மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close