ஒடிசா: பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 12:19 am
7-dead-in-odisha-bus-accident

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் நேற்றிரவு ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து நேற்றிரவு  ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close