ஜார்கண்ட் மாநிலத்தில் 2 பெண்கள் தற்கொலை !

  டேவிட்   | Last Modified : 22 Nov, 2018 05:15 pm
2-girls-commit-suicide-in-jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தில் வெவ்வேறு இரண்டு இடங்களில், இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் உள்ள துர்வா அணையின் ஓரம் ஒரு இளம் பெண்ணின் உடலைக் கண்ட அங்கிருந்த மீனவர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் இளம் பெண்ணின் பெயர் முஸ்கான் சிங் எஞ்சினியர் என்றும், இவர் தனது தாயுடன் நேற்று சண்டையிட்டு விட்டு வீட்டைவிட்டு சென்ற பின், வீடு திரும்பவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. 

இதேபோல், வினிதா குமார் (19) என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாரணையில் இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கனவே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்த இரு சம்பங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close