பிரம்மாண்டமான சட்டசபை கட்ட ஆந்திர அரசு முடிவு

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 10:56 am
andhra-pradesh-decided-to-build-the-highest-tallest-assembly-in-the-world

அமராவதியில், உலகின் மிக உயரமான படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டிடம் கட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். 

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 182 மீட்டர் பட்டேல் சிலையின் திறப்பிற்கு பின்பு, மாநிலங்களிடையே சிலை வைப்பதற்கான போட்டிகள் நிலவி வருவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 201 மீட்டரில் ராமருக்கு சிலை அமைக்க போவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதியநாத் அறிவித்தார். பின்னர் காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், புதிதாக அமையவுள்ள ஆந்திர தலைநகரான அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டிடம் அமைக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டசபை கட்டிடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், 80 மீட்டர் உயரத்தில் உள்ள முதல் மாடத்தில் 300 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டதாகவும், 250 மீட்டர் உயரத்தில்அமைக்கப்பட உள்ள 2வது மாடத்தில் 20 பேர் அமரக்கூடிய வசதி கொண்டதாகவும், இங்கிருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்கும் வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2வது மாடத்திற்கு செல்ல மின் தூக்கி வசதியும் செய்யப்படவுள்ளதாம்.  

புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த உயரமான சட்டசபை கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பில் சிறு திருத்தங்கள் செய்து, இரண்டு நாட்களில் சந்திரபாபு நாயுடு இறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நவம்பர் மாத இறுதியில் இந்த சட்டசபை கட்டிடம் கட்ட டெண்டர் கோரப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் இந்த கட்டிட பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தலைமை செயலகத்திற்காக 5 கட்டிட மாதிரிகளையும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close