விவசாயிகள் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம்: எடியூரப்பா தாக்கு

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 09:12 am
the-people-of-karnataka-will-have-a-good-lesson-for-congress-party-yeddyurappa

கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்வர் குமாரசாமி தான் காரணம் என்று எடியூரப்பா குற்றம் சாட்டி உள்ளார். 

இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதங்களில், அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. விவசாயிகள் தற்கொலைக்கு முதலமைச்சர் குமாரசாமியே காரணம் ஆகும். '

தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது என குமாரசாமி கூறியிருந்ததை சுட்டி காட்டி, சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?. குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டதால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார். குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார்.

ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார். செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசி பெண் இனத்தை அவமதித்துவிட்டார். இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close