ஹிமாச்சலப்பிரதேசம்: பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 26 Nov, 2018 12:59 am
9-dead-at-least-30-injured-as-bus-plunges-into-himachal-prdesh-rivulet

ஹிமாச்சலப்பிரதேசத்தில் டடாஹு அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசம் சிர்மாவ்ர் மாவட்டம் டடாஹூ அருகே ஒரு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து  சிம்லா-சோலான் எல்லைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21  பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close