டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 3 பேர் கைது..!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 09:34 am
3-terrorists-arrested-in-kashmir

காஷ்மீரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பேர் ஊடுருவி இருப்பாதாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களது படங்களையும் வெளியிட்டதோடு, டெல்லி மற்றும் காஷ்மீரில்  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டத்துடன் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரையொட்டி உள்ள கோதிபாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுதுறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் டெல்லி சிறப்பு போலீஸாரும், காஷ்மீர் போலீஸ் படையினரும் நேற்று அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்குள்ள சுற்றுலா தகவல் நிலையம் அருகே 3 பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். உடனே, அவர்களை டெல்லி, காஷ்மீர் போலீஸ் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், டெல்லியில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி காஷ்மீர் வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close