மத்தியப்பிரதேசம், மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது

  டேவிட்   | Last Modified : 28 Nov, 2018 02:17 am
polling-begins-at-madhyapradesh-and-mizoram

230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்துக்கும் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

மத்தியப் பிரதேச மாநில தேர்தல் களத்தின் 2907 வேட்பாளர்களில் பாஜக சார்பில் 230 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி 229 வேட்பாளர்களும், களத்தில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 227 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 51 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 1102 பேர் களத்தில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2.63 கோடி ஆண் வாக்காளர்களும், 2.41 கோடி பெண் வாக்காளர்களும், 1,389 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். முதலமைச்சர் சிவராஜ் சவுகான் தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அருண் யாதவ் போட்டியிடுகிறார்.

இதேபோல், மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 7.70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் 40 வேட்பாளர்களும், பாஜக 39 வேட்பாளர்களும், என்என்எப் தொகுதி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் லால் செர்சிப், சாம்பாய் சவுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அசம்பாவிதங்களை தவிர்க்க இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  இன்று  காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close