முஸ்லீம்களுக்கு தனி பள்ளிக்கூடம்: தெலங்கானாவில் காங்கிரஸ் செய்யும் மதவாத அரசியல் 

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 04:02 pm
telangana-election-congress-manifesto-vows-muslim-only-schools-govt-contracts-details

முஸ்லீம்களுக்கென தனி பள்ளிக்கூடம், இலவச மின்சாரம் என மதவாதத்தனமான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசி வருவது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 90% முஸ்லீம் வாக்கு வங்கியைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசிய காட்சிகள் வெளியாகி சரச்சையைக் கிளப்பியது. அதற்குள் சிறுபான்மையினரை மட்டும் குறிவைக்கும் காங்கிரசின் மதவாத உத்திக் கொண்ட வரைவு தேர்தல் அறிக்கை தெலங்கானாவில் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடக்கிறது. 

தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு முஸ்லீம்களைக் கவரும் நோக்கில் ஏழு திட்டங்களை காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. தெலுங்கானா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாரித்த வரைவு தேர்தல் அறிக்கையை தனியார் தொலைகாட்சி அம்பலப்படுத்தியுள்ளது. அதில், முஸ்லீம்களைக் கவரும் நோக்கத்துடன் 7 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மசூதி மற்றும் தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லீம் இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு, ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி, முஸ்லீம்களுக்கான பிரத்யேக உண்டு - உறைவிடப் பள்ளி, சிறுபான்மையினருக்கான மருத்துவமனை, சிறுபான்மையினருக்கான சிறப்பு உருதுமொழி ஆணையம் மற்றும் மத அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கான தண்டனை ஆகிய அம்சங்கள் அதில் உள்ளன. 

ஏற்கெனவே தெலங்கானாவில் கசிந்த மற்றொரு வரைவு தேர்தல் அறிக்கையில் கிறிஸ்தவ பிஷப்களை பாதுகாக்கும் அம்சங்கள், பாதிரியார்களுக்கு ஊதியம், கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு நிதி, கிறஸ்தவ சங்கங்களுக்கு நிலம், கிறிஸ்தவ புனித ஸ்தலங்களுக்கு செல்ல பணம், கிறிஸ்தவ மதத்தலைவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளில் சீட்டு, கிறிஸ்தவ பத்திரிகையாளர்களுக்கு வீடு, அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகள் என்பது போன்ற அந்த சமுதாயத்தை மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகர அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்த காங்கிரஸ் ஊடகங்களால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. 

கிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close