புயல் பாதிப்பு: ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 11:29 am
storm-damage-gst-extension-of-time-to-file-an-account

புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தித்லி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close