கேரள மீட்பு பணிகளுக்காக ரூ.291 கோடி பில் அனுப்பிய மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 10:06 am
centre-charges-kerala-rs-291-crore-for-airlifting-ration-goods-during-floods

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக விமானப்படை, ரேஷன் பொருட்கள் உட்பட அனைத்திற்கும் சேர்த்து ரூ. 291 கோடிக்கு மத்திய அரசு பில் அனுப்பி உள்ளது. 

கேரள மாநிலத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒருவாரம் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை இல்லாத அளவில் அந்த மாநிலம் பெரும் அளவில் சேதத்தை சந்தித்தது. இந்த வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், போலீஸார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.

இதில் வீடுகளை இழந்து மாடிகளில் நின்றுக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கானோரை விமானப்படை வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். இன்றளவும் அவர்களை பாராட்டும் பதிவுகள் இணையத்தில் பரவி வருகிறது. 

இந்நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்காகவும், ரேஷன் பொருட்களுக்காகவும் மத்திய அரசு கோடிக்கணக்கில் பில் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசியார். அப்போது அவர், "கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழை, வெள்ளத்தால் மாநிலத்தில் ரூ.31 ஆயிரம் கோடி மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேசிய பேரிடர் நிதியாக இதுவரை கேரள அரசுக்கு ரூ.2,683.18 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது மாநிலத்தைக் கட்டமைக்க போதுமானதாக இல்லை.

அதுமட்டுமல்லாமல் முதல்கட்டமாக மத்திய அரசு வெள்ளத்தின் போது கேரள அரசுக்கு ரூ.600 கோடி நிதி வழங்கியது. ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காகவும், மீட்புப்பணிக்கு உதவியதற்காகவும் ரூ.290 கோடி கேட்டுள்ளது. ரூ.600 கோடியில் ரூ.290 கோடி மத்திய அரசுக்கு மீண்டும் சென்றுவிடும். வெள்ளத்தின் போது செய்த மீட்புப்பணிக்காக ரூ.33.79 கோடி பில்தொகை செலுத்த விமானப்படை கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

எனவே கேரள அரசுக்கு உறுதியான உதவிகளைச் செய்யுமாறு கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருக்கிறேன். அதில் உயர்மட்டக்குழுவைக் கூட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். உயர்மட்டக் குழுவின் முடிவுக்குப்பின்புதான் நிதி ஒதுக்கப்படும். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். மத்திய அரசு இதுவரை உயர்மட்டக்குழுக் கூட்டம் கூட்டவில்லை. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி நிதி உதவி வருவதையும் வாங்க மத்திய அரசு மறுத்துவிட்டது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close