பிளாஸ்டிக் தவிர்ப்பு: இனி அட்டைபெட்டியில் திருப்பதி லட்டு

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:15 pm
plastic-avoid-tirupathi-lattu-now-in-the-card-box

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, அட்டைப்பெட்டியில் வைத்து வழங்க தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. 

ஆந்திர மாநிலம், திருப்பதியில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி தடைவிதித்திருந்தது. இதை தொடர்ந்து திருப்பதி திருமலையிலும், பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்வது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கடந்த நவ.1ம் தேதி முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது. அதேநேரத்தில், லட்டுகளை போட்டு தரும் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த நகராட்சி அதிகாரிகளிடம், தேவஸ்தானம் அனுமதி கோரியிருந்தது. 

இந்நிலையில், பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கும் விதமாக, லட்டுகளை அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்த தேவஸ்தானம், மூன்று விதமான அட்டைபெட்டிகளை தயாரித்துள்ளது. அட்டை பெட்டிகளில், ஏழுமலையான் உருவப்படம், தேவஸ்தான முத்திரை இடம்பெற்றுள்ளன. இதில், லட்டு பிரசாதத்தை, 10 நாட்களுக்கு மேலாக வைத்து, தர பரிசோதனை செய்யப்பட்டது. அதில், லட்டு பிரசாதத்தின் தரமும், சுவையும் மாறாததால், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close