கேரள உள்ளாட்சி தேர்தல்: இடதுசாரிகள் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:21 pm
left-won-in-kerala-local-body-bypolls

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39 வார்டுகளில் 19 வார்டுகளை மார்க்சிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்றது. 

கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 39 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கூட்டணி 19 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 12 வார்டுகளை கைப்பற்றியது. எஸ்.டி.பி.ஐ மற்றும் பா.ஜ.க தலா இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றன.

தற்போது கேரளாவில் பரபரப்பாக உள்ள சபரிமலை பிரச்னையை அடுத்து இடதுசாரிகளுக்கு மக்களிடையே வாக்குகள் குறையும் என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கேரளாவில் நடந்த முதல் தேர்தல் இது.  இந்நிலையில் இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள கேரள அமைச்சர் ஜெயராஜன், இந்த தேர்தல் முடிவின் மூலம் இடதுசாரி ஆட்சிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close