அசாம் ரயில் குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழப்பு; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  டேவிட்   | Last Modified : 02 Dec, 2018 04:41 pm
2-killed-in-assam-train-bomb-blast

அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு இன்டர்சிட்டி ரயிலில் நேற்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Lumding-Tinsukia passenger train

அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில்  சென்று கொண்டிருந்த லும்டிங் டின்சுகியா பயணிகள் ரயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு விபத்தில் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயிலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு, ஏற்கனவே நேரத்தை கணித்து வைத்து வெடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இண்டர் சிட்டி ரயிலில் இதேபோல் குண்டு வெடித்து அதில் பயணம் செய்த 11 பேர் படுகாமடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close