உ.பி.யில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை: யோகி ஆதித்யநாத் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 02:30 pm
up-banning-to-marriages-for-3-months-yogi-adithyanath-order

உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை  திருமணம் நடத்த தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன. இதையொட்டி உத்தரப்பிரதேசத்திற்கு ஏராளமான மக்கள் திரண்டு வருவர். பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் விடுதிகளில் தங்கி கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வர். 

இதுபோன்று மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போது, திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, விடுதிகளில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close