குஜராத் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வுக்கான வினாத்தாள் கசிவு...

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:26 pm
gujarat-constable-examination-cancel

குஜராத்தில் வினாத்தாள் வெளியானதால் இன்று நடைபெற இருந்த காவலர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

குஜராத் மாநில காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவிருந்த நிலையில், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். மேலும், வினாத்தாள் வெளியாகியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close