சபரிமலைக்கு புதிய எஸ்.பி...யார்...?

  டேவிட்   | Last Modified : 02 Dec, 2018 07:28 pm
new-sp-for-sabarimala

சபரிமலைக்கு புதிய எஸ்.பி.யாக  ஆர்.கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டம் நாலட்டின்புத்தூரை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக இருந்த எஸ்.பி. யாதிஷ் சந்திரா மாற்றம் செய்யப்பட்டதையடுத்து கருப்பசாமி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். 

சபரிமலை தீர்ப்பு சர்ச்சையில் இருந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் சபரிமலை சென்றிருந்த மத்திய நிதியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வாகனத்தை, அப்போது இருந்த எஸ்.பி.யாதிஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து எஸ்.பி.யாதிஷ் சந்திரா பணிமாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், சபரிமலைக்கு புதிய எஸ்.பி.யாக  திருநெல்வேலி மாவட்டம் நாலட்டின்புத்தூரை சேர்ந்த ஆர்.கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close