தெலங்கானா: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் மோடி 

  டேவிட்   | Last Modified : 03 Dec, 2018 12:07 am
modi-in-telangana-campaign-for-bjp-candidates

தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கானாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில், பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். 

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார். 

தெலங்கானா செல்லும் நரேந்திர மோடி, ஹைதராபாத் லால் பகதூர் சஸ்திரி மைதானத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகிறார் என தெலங்கானா பாஜக செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் அறிவித்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close