காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 09:49 am

three-terrorists-killed-in-kashmir

காஷ்மீரில் பாதுகாப்புபடையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள சங்க்ரான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை கண்ட பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.