ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 09:30 am
bjp-s-attempt-to-dissolve-the-regime-will-never-succeed-kumarasamy

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில, முதலமைச்சர் குமாரசாமி நேற்று தனது குடும்பத்துடன் மல்லேசுவரத்தில் உள்ள காடு மல்லேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணிஆட்சியை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், ஆனால், பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது எனவும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் தெரிவித்தார். 

மேலும், நாங்கள் நல்லாட்சியை நடத்தி வருவதாகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கூறிய அவர், காடு மல்லேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கர்நாடக மக்களுக்கு நல்லது நடைபெற வேண்டும் என வேண்டிகொண்டதாக கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close