உ.பியில் பாதுகாப்புப் படை குவிப்பு: பசுவதை எதிர்ப்பு போராட்டம் கலவரமானதால் பதற்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:36 pm
cop-among-2-killed-as-mob-targets-police-in-up-over-cow-slaughter

உத்தரபிரதேசத்தில் பசு கொல்லப்பட்டு இருந்ததை அடுத்து உருவான போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது கல்வீச்சில் போலீஸ் அதிகாரி பலியானார். துப்பாக்கி சூட்டில் வாலிபரும் கொல்லப்பட்டார். இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலத்தில் புலந்த்சாகர் கிராமத்தில் பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இதனைக் கண்ட கிராம மக்களும், இந்து அங்குள்ள அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோபமடைந்து இதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பசுவதையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தீவிர போராட்டத்தில் குதித்தனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சமாதானப்படுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் போராட்டத்தின் இடையே ஒரு கும்பல், போலீசார் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு பதற்றம் உண்டானது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. 

கலவர சூழல் ஏற்படுவதை தடுக்க போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலிஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் என்பவர் கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவரும் குண்டு காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த போராட்டம் மற்றும் கலவரத்தில் 2 பேர் பலியானது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 400-க்கும் அதிகமான உள்ளூர்காரர்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர். அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் இன்ஸ்பெக்டர் தலையிலேயே கல் விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறப்பு அதிரடி படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close