தெலுங்கானாவில் இன்று தேர்தல்: ஓட்டுக்கு நோட்டு, ரூ.3½ கோடி பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 07 Dec, 2018 02:09 am
telangana-rs-3-5-crores-caught-by-police

தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு கொடுக்க, எடுத்துச் சென்ற ரூ.3½ கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் பறிமுதல் செய்துள்ளனர். 

தெலுங்கானா சட்டசபைக்கு இன்று (டிச.7) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் வண்ணம், மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், வாரங்கல் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அந்த வேனில் ரூ.3½ கோடி இருப்பது தெரியவந்தது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close