ஹனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:32 am
political-party-seeking-community-certificate-for-hanuman

வாரணாசியில், ஹனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் கடந்த 27 -ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஹனுமன் ஒரு காட்டுவாசி என்றும், தலித் இனத்தை சேர்ந்தவர்" என்றும் கூறினார். மேலும், "ராம பக்தர்கள் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் எனவும், ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" எனவும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், "லோகியா" என்ற கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஹரிஷ் மிஸ்ரா என்பவர், ஹனுமனுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "ஹனுமனின் தந்தை - மகராஜ் கேசரி, தாயார் - அஞ்சனா தேவி, பிறப்பிடம் - வாரணாசி சங்கத் மோச்சன் கோவில், வயது - அழிவில்லாதது,  அவர் தலித் என்பதற்கான சாதி சான்றிதழ் வழங்கும் வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் சாதி சான்றிதழ் வழங்காவிடில் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close