சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 03:57 pm
the-bjp-supported-the-chandrasekhara-raav

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என பாஜக அறிவித்துள்ளது. 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளில், தெலங்கானாவில்  சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என்றும், காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகிய காட்சிகள்தான் தங்களுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் என்றும் பாஜக மாநில தலைவர் கே. லட்சுமன் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close