ம.பியில் மேலும் 2 பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 06:09 pm
madhya-pradesh-election-results2018-updates-3-bjp-candidates-wins

தற்போதைய நிலவரப்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவும் காங்கிரஸ் சிறிதளவு வித்தியாசத்தில் இழுபறி நிலையிலே உள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியமையக்க தேவையான தொகுதிகள் 116 ஆகும். 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இழுபறிக்கு இடையே ரட்லம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சேத்தன் கஷ்யப் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் முதல் வெற்றியை பாஜக எட்டிய நிலையில், அடுத்த 2 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இந்தூர்-3 தொகுதியில் பாஜகவின் ஆகாஷ் விஜய்வர்ஜியா 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், ரட்லம் ஊரக பகுதியில் திலீப் குமார் மக்வானா 5,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக - 106

காங்கிரஸ் -115

பிஎஸ்பி -2

பிற கட்சிகள் -7

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close