நாளை தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ்....!

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 11:31 am
tomorrow-inauguration-function-in-telangana

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி செய்து வந்த நிலையில், ஆட்சி முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் சந்திரசேகர ராவ். இதை தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குப்பதிவுகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, முடிவில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 

இதையடுத்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ், இன்று பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சந்திரசேகரராவ் நாளை தெலங்கானா மாநில முதலமைச்சராக 2வது முறை பதவியேற்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close