சபரிமலை விவகாரம்: ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 09:17 am
sabarimala-issue

சபரிமலையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வலியுறுத்தி கேரள தலைமைச் செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியும் போராடினர். இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோயிலில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த144 தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி, ஐயப்ப பக்தர் ஒருவர் கேரளா தலைமைச்செயலகம் முன்பு தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சபரிமலை விவகாரத்தில் பக்தர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close