கர்நாடகாவில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 11பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 09:21 am
11-people-were-killed-in-the-poisoned-temple-food-in-karnataka

மைசூர் அருகே விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த ஹனூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப்பிட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  சிலர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும், 72 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்களும் சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், பிரசாதத்தை உட்கொண்ட 60க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் கட்டுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close