பள்ளி, கல்லூரிகளில் படேல் சிலை: குஜராத் அரசு முடிவு !

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 11:53 am
patel-memorial-day-decision-to-establish-patel-statue-in-the-gujarat-school-and-colleges

வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, குஜராத் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்திய விடுதலை இயக்க தலைவரான இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக கடந்த அக்டோபர் 31ம் தேதி குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய படேல் சிலை நிறுவப்பட்டது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் படேல் சிலையின் சிறிய அளவு மாதிரி சிலைகளை குஜராத் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close