பாஜக ஆட்சிக்குப் பின் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 06:33 pm
the-security-of-the-country-has-increased-after-the-bjp-regime-rajnath-singh

மத்தியில் பாஜகவின் ஆட்சிக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் - இந்தியா இடையே நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நாளான டிசம்பர் 16ம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் விஜய் திவாசாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  " கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் வரலாற்றையும், எல்லையையும் நம்மால் மாற்ற முடியும் என்பதை இந்திய ராணுவம் நிரூபித்துகாட்டியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு  நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நக்சல்கள் ஆதிக்கம் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 90ல் இருந்து  12ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலும் 80 சதவீதம் குறைந்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது" என கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close