காஷ்மீரில் 144 தடை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 11:50 am
144-in-kashmir

காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்ரீநகர் உட்பட பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புபடை வீரர் வீரமரணம் அடைந்தார். 

இதனிடையே, அப்பகுதியில் இருந்த கலவரக்காரர்கள் பாதுகாப்புபடையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புபடையினர் பெல்லட் குண்டால் தாக்குதல் நடத்தினர். இதில் 7  பேர் உயிரிழிந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்று ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், புல்வாமா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  மேலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இணையதள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close