பெய்ட்டி புயல்: கடலோர ஆந்திரத்தில் கொட்டித் தீர்க்கும் மழை!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 11:43 am
heavy-rains-lash-coastal-andhra

"பெய்ட்டி" புயலின் காரணமாக கடலோர ஆந்திர மாவட்டங்களான கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே இன்று மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயலின் காரணமாக  கடலோர ஆந்திர மாவட்டங்களான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது.

மொத்தமுள்ள 9 கடலோர மாவட்டங்களில் 7 மாவட்டங்களுக்கு அரசு நிர்வாகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்ட கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்தபடியே விடியோ கான்ஃப்ரன்சிங் மூலம், மாவட்ட ஆட்சியர்களுடன் புயல்,மழை நிலவரங்கள் குறித்து கலந்தாலோசித்து வருகிறார்.

இன்று காலை நிலவரப்படி, பெய்ட்டி புயல் மசூலிப்பட்டிணத்துக்கு தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தெற்கே 190 கிலோமீட்டரிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close